
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, மனதிற்கு ஒப்பாத செயலில் ஈடுபட வேண்டாம். தடைப்பட்ட வேலைகள் விரைவில் முடியும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். தொழில் வியாபாரத்தில் மிதமான லாபம் வரும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, வேண்டியவர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். எதையும் வெளிப்படையாக பேசுவது நல்லது. பயணங்களால் அலைச்சல் உண்டாகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்ப நபர்கள் உங்கள் பேச்சை கேட்டு நடப்பர். கணவன் மனைவி உறவு பலப்படும்.உறவினர்கள் பகைமை பாராட்டுவர். எதிர்த்து நின்றவர்கள் கூட விலகி நிற்பர். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்பத்தில் சிறு சிறு சண்டை சச்சரவுகள் வந்து போகும். முக்கிய காரியங்கள் முடிவடையும். மற்றவர்கள் மனம் நோகும் படி பேச வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்தினரை அனுசரித்து செல்லவும். மனதில் ஒருவித தயக்கம், தடுமாற்றம் வந்துச் செல்லும். பணம் வரவில் தாமதம் இருக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, எதிர்காலம் நலன் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றி பெரும். உடன்பிறப்புகள் நல்ல ஒத்துழைப்பு தருவர். தொல்லை கொடுத்தவர் உதவுவர். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, நண்பர்களுடன் சிறிய விரிசல்கள் வரக்கூடும். அடிப்படை வசதிகள் பெருகும். அடுத்தவரின் ஆலோசனைக்கு செவி சாய்க்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே,பணவரவு நன்றாக இருக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். யாரிடமும் வாக்கு வாதம் செய்ய வேண்டாம். கடன் பிரச்சனை தலை தூக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் கை ஓங்கும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். யாரையும் எளிதில் நம்ப வேண்டாம். அடுத்தவர்களின் பலம், பலவீனம் அறிந்து செயல்படவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.இன்றும் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய இயலும்.பண தேவைகள் பூர்த்தியாகும். நட்பால் நன்மை உண்டு. பழைய பிரச்சனைக்கு நல்ல ஒரு தீர்வு வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நெருங்கிய உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்கள். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்ப சிக்கல்கள் வெகுவாக குறையும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
Image credits: Freepik