ஆன்மிகம்ராசிபலன்

இன்றைய ராசிபலன் 24 ஆகஸ்ட் சனிக்கிழமை

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே,பொருளாதார உயர்வு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும்.யாரையும் அதிகம் நம்பி ஏமாற வேண்டாம். கடன் நெருக்கடிகள் குறையும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும் யாருக்கும் வாக்குறுதிகளை வழங்க வேண்டாம்.

ரிஷபம்

ரிஷப ராசி நண்பர்களே, பழைய நல்ல சம்பவங்கள் ஞாபகத்திற்கு வரும். பால்ய நண்பர்களின் சந்திப்பு நிகழும்.உறவினர்கள் உதவிக் கேட்டு தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவர். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். உத்யோக மாற்றம் ஏற்படும். தொழில் வியாபாரங்கள் லாபத்தைத்தரும்.

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் வந்து போகும். கணவன் மனைவிக்குள் புரிதல் அவசியம். மனதில் ஒரு வித படபடப்பு ஏற்படும். முக்கிய வேலைகளை முடிக்க வேண்டிவரும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.தொழில் வியாபாரங்கள் சிறப்படையும்.

கடகம்

கடக ராசி நண்பர்களே,காரிய தடைகள் விலகும். முன்னேற்றத்திற்கான நல் வழி கிடைக்கும். உறவினர்கள் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

சிம்மம்

சிம்ம ராசி நண்பர்களே, திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும்.யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். பிரபலங்களின் தொடர்பு உற்சாகம் தரும். வாகன யோகம் உண்டு. தொழில், அலைச்சல் அதிகமாக காணப்படும். வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

கன்னி

கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் விருத்தினர்கள் வருகை இருக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனப்போர் நீங்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனமும் நிதனமும் அவசியம்.

துலாம்

துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்துடன் பயணிக்க விருப்பம் ஏற்படும். மனதில் புது உற்சாகம் பிறக்கும். நீண்ட நாள் பிரச்னைக்கு முடிவு வரும். உத்யோகத்தில் உயர் பதவிகள் தேடி வரும்.தொழில் வியாபாரங்கள் லாபத்தை தரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே, குடும்ப நிதி நிலைமை சீரடையும். பிரியமானவர்கள் வழியில் நல்லது நடக்கும். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேருவார்கள் காரிய தடை விலகும். பொருளாதார உயர்வு உண்டு.தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

தனுசு

தனுசு ராசி நண்பர்களே, பிரியமானவர்களின் அன்பை பெற முடியும். கணவன் மனைவிக்கு உறவு பலப்படும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.தேவையின்றி கடன் வாங்குவதை தவிற்க்கவும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மகரம்

மகர ராசி நண்பர்களே, புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.வார்த்தைகளை அளந்து பேசவும் யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம் . புது நண்பர்கள் அறிமுகமாவர். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே, குடும்ப பெரியோர்கள் ஆதரவாக இருப்பர்.பூர்வீக சொத்து பிரச்சனைகள் தீரும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். தேவையான பொருட்களை வாங்க முடியும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மீனம்

மீன ராசி நண்பர்களே, எந்த ஒரு எதிர்ப்புகளையும் சமாளிக்க முடியும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். பெற்றோருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும்.சகோதரர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும்.தொழில், வியாபாரத்தில் செழிப்படையும்.

Image credits: Freepik

What's your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0

You may also like

ஆன்மிகம்

கண்ணனின் 108 போற்றி I கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

இன்று கிருஷ்ண ஜெயந்தி.யசோதையின் செல்லப் பிள்ளையாய் அனைவரின் மனதைக் கொள்ளைக் கொண்டவன். வாசுதேவன் அவதரித்த நாள். சிறுவயது முதலே அனைவரின் ...
1008 முருகன் போற்றிகள்
ஆன்மிகம்

கந்தனுக்கு உகந்த கந்தர் கலிவெண்பா பாடல் வரிகள்

கந்தன்..முருகன்.. என்றாலே அடுத்து நினைவுக்கு வருவது அருணகிரிநாதர். 51 விருத்தப்பாக்களால் ஆன கந்தர் அனுபூதி என்பது கந்தனுக்கு உரிய பாடல்களில் ...
இன்றைய ராசி பலன்
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 04 செவ்வாய்க் கிழமை

பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

clock on the table with sun and tree ஆன்மிகம்

இன்றைய பஞ்சாங்கம் 04 பிப்ரவரி செவ்வாய் கிழமை

பஞ்சாங்கம் படிப்பதால் உங்களுக்கு தினமும் கிடைக்கும் நன்மைகள் வாரத்தை ( நாள்) சொல்லுவதால் ஆயுள் வளரும். திதியை கூறுவதால் ஐஸ்வரியம் ...
hindu marriage ஆன்மிகம்

பிப்ரவரி 2025 முக்கிய விரத தினங்கள்.. சுபமுகூர்த்த நாட்கள்.. முழு விவரம் இதோ!

பிப்ரவரி 2025: தைத்திருநாளுக்கு பிறகு  திருமண வைபவங்கள் அதிகமாக நடைபெறும் மாதம் இந்த பிப்ரவரி மாதம். தை மாசி இணையும் ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 01 சனிக்கிழமை

பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் 31 ஜனவரி 2025 வெள்ளிக்கிழமை

மேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். குடும்பத்தினருடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை நிலவும். ...