
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே.மனம் உற்சாகமடையும் புது யுக்திகளால் காரிய தடைகள் விலகும்.தொழில் எதிரிகள் விலகுவார்கள். குடும்பத்தில் ஏற்றமான பலன் உண்டு. கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.சந்திராஷ்டம் தொடங்குவதால் அடுத்த இரண்டு தினங்களுக்கு கவனம் தேவை.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, முற்போக்கான சிந்தனைகள் மனதில் இருக்கும். வீட்டு பராமரிப்பு செலவு கூடும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தொழில்,பண விவகாரங்களில் கவனம் தேவை.யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள். வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்ப வருமானம் கணிசமாக உயரும். பெண்களால் சில மனவருத்தங்கள் வரும். கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் வந்து போகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரங்கள் மிதமாக இருக்கும் புதிய முதலீடுகள் தவிர்க்கவும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்ப வேலைகளை கவனிக்க வேண்டி வரும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, எதையும் எதிர்த்து நின்று போராடும் தைரியம் இருக்கும், பொருளாதார வளம் மேம்படும். ஏதோ ஒரு வழியில் பணம் வரும் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.சிறப்பான செயல்களால் மதிப்பு, மரியாதை கூடும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே,மன அமைதி கிடைக்கும்.பண தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்து கார்த்திருந்த காரியம் விரைவில் கைகூடும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்ப விஷயங்களில் மற்றவர்கள் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தை பற்றிய கவலை அதிகமாகும். பண தட்டுப்பாடு காணப்படும் தேவையின்றி கடன் வாங்குவதை தவிர்க்கவும் .திருமண பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.பண வரவு நன்றாக இருக்கும். பிடித்தமான விஷயங்களை செய்ய முடியும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்பத்தில் அன்பு, மகிழ்ச்சி பொங்கும். வரவுக்கு மீறிய செலவு ஏற்படும். உறவினர்களிடம் சிறிய மனஸ்தாபம் ஏற்படலாம்.கணவன் மனைவிக்குள் வீண் விவாதங்கள் வேண்டாம். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் சிறப்படையும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, உற்சாகமாக காணப்படுவீர்கள் மனதில் தெளிவு நிலை உண்டாகும். உறவினர்கள் அன்பு பாராட்டுவர். பண பிரச்சனை அவ்வப்போது வந்து போகும்.வீண் சிலவுகளை குறைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே,சந்தோஷ செய்தி ஒன்று கிடைக்கும் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும்.தள்ளி போன விஷயங்கள் உடனே முடிக்க முடியும். புதியவரின் நட்பால் உற்சாகம் ஏற்படும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.தொழில் வியாபாரத்தில் அமைதி நிலவும்.
Image credits: Freepik