
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே,இன்று உற்சாகமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் முன்னேற்றகரமான சூழல் அமையும். தன வரவுக்கு நிறைய வாய்ப்புண்டு. கணவன் மனைவிடையே அன்பு மேலோங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, பிரியமானவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி நிச்சயம். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, பயணங்களால் அனுகூலமான பலன் உண்டு. எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். உறவினர்களிடம் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்பத்தில் உங்கள் புகழ் ஓங்கும். பண வரவுகள் நன்றாக இருக்கும் .உறவினர்கள் ஆதரவாக செயல்படுவர். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, உங்கள் எதிர்பார்ப்பு எதுவாகினும் அது நிறைவேறும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகமாக காணப்படும் .தொழில், வியாபாரங்கள் மிதமாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் பழைய அமைதி மீண்டும் திரும்பும். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும்.தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே,குடும்பத்தைப் பற்றிய சிந்தனை அதிகமாகும். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேச வேண்டாம்.பயணங்களால் புத்துணர்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, எதிர்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பாதியில் நின்ற வேலைகள் விரைவில் முடிவடையும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வீட்டில் சுபச் செலவுகள் ஏற்படும். எதிரிகளின் பலம் குறையும்.வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். சுற்றியிருப்பவர்களால் நன்மை உண்டு. சவாலான வேலை களையும் சாதாரணமாக செய்ய முடியும். உத்யோகத்தில் சகஊழியர்கள் ஆதரிப்பர்.மதியம் 01:40 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, சொந்த பந்தங்களுடன் இருந்த மனக்கசப்பு மாறும். நண்பர்களிடம் மனம் கோணாமல் நடந்துகொள்ளவும். வாகனத்தில் மித வேகம் அவசியம். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். இன்று
மதியம் 01:40 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குகிறது.
மீனம்
மீன ராசி நண்பர்களே, மற்றவருக்கு உதவு செய்வதால் மன மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களால் நன்மை உண்டு. கணவன் மனைவிக்குள் இருந்து பகைமை மாறும். பிரிந்த உறவுகள் ஒன்று சேருவார்கள் உத்யோகத்தில் அமைதி நிலவும்.
Image credits: Freepik