
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, நினைத்த காரியம் நிறைவேறும். புதிய முயற்சிகளில் இருந்த தடை நீங்கும். உங்களால் சுற்றி இருப்பவர்கள் பயன் பெறுவர். திருமண காரியம் விரைவில் கைகூடும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வழக்கில் இழுபறி நிலை நீடிக்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் வரும்
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் உள்ளவர்கள் பாசமழை பொழிவர். செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்கவும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்ப தேவைகள் அதிகரிக்கும். உற்றார், உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல், வாங்கலில் சரளமான நிலையிருக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.மதியம் 02:22 வரை ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் மனக்குழப்பங்கள் காணப்படும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, பெற்றோர்களிடம் மனஸ்தாபம் வந்து போகும். எதையும் எதிர்கொள்ளும் சாமர்த்தியம் பிறக்கும். பயணங்களால் அலைச்சல் உண்டு. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்ப பிரச்சனைகள் நாளடைவில் சீராகும். அடிக்கடி உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்கவும். பண வரவில் நெருக்கடிகள் குறையும். புது தொழில் தொடங்குவதில் கவனம் தேவை.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். எதிர்பார்த்த காரியங்கள் தாமதமாகும். ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் நன்கு வளர்ச்சி பெரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல் நீங்கும். தெய்வ வழிபாடு மேன்மையை தரும். கணவன் மனைவி உறவு சுமூகமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, பொருளாதார நிலையில் பின்னடைவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.இரவு 08:23 வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்ப நபர்களிடம் இணக்கமாக செல்லவும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தில் ஆதரவு பெருகும். எடுத்த வேலையை செய்து முடிப்பதில் சிரமம் இருக்கும். பண சேமிப்பில் கவனம் செலுத்தவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, தெய்வ வழிபாடு மேன்மையை தரும். உறவினர்களின் அன்பு மகிழ்ச்சி தரும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். தொழில் வியாபாரங்கள் செழிப்பை தரும்.
Image credits: Freepik