
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
சோபகிருது வருடம் பங்குனி மாதம் 14ம் தேதி 27-03-2024 புதன்கிழமை.
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, நினைத்தது நடக்கும்.விரும்பிய காரித்தை விரும்பியபடியே செய்ய முடியும். யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம். காதல் கைகூடி திருமணத்தில் முடியும். உத்யோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.தொழில், வியாபாரம் செழிப்படையும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, பழைய நல்ல சம்பவங்களை நினைவுக்கு வரும். உறவினர்களால் வீண் அலைச்சல் வரும்.முன் கோபத்தை தவிற்க்கவும். புது நட்பால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே,மனதிற்கினிய நற் செய்தி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மனபயத்தை நீக்கவும். கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்சனை வந்து போகும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்ப பொறுப்புகளை சுமக்க வேண்டிவரும். காரிய தடைகள் விலகும் .வசீகரப் பேச்சால் மற்றவர்களை எளிதில் கவர முடியும். தேக நலனில் கவனம் தேவை. உணவு கட்டுப்படு அவசியம்.தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, உறவினர்களிடையே மனஸ்தாபங்கள் உண்டாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிட்டும். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தொழில் வியாரங்கள் சீராக இருக்கும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். ஆன்மிக எண்ணம் மேலோங்கும். புது வீடு வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். லோன் எளிதில் கிடைக்கும் தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் திட்டமிடாத செலவுகள் வரும். புது நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். தள்ளி போன காரியங்கள் விரைவில் முடியும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும். யாருக்கும் வாக்குறுதிகள் வழங்காதீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தில் யாரையும் குறை சொல்ல வேண்டாம். மனதில் தெளிவு நிலை உண்டாகும். எதிரிகள் பலமிழந்து நிற்பர்.தொழில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.வியாபார யுக்திகளால் லாபம் பன் மடங்கு உயரும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, அடிக்கடி பயணங்களால் அலைச்சல் ஏற்படும். உஷ்ண நோய் உண்டாகும் தண்ணீர் நிறைய பருகவும்.பெற்றோர்களால் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். பிரியமானவர்கள் ஆதரவாக இருப்பர். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. யாரையும் பகைத்துக்கொள்ளதீர்கள். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும். மனச்சுமை குறையும். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.அவசர முடிவுகள் தவிற்க்கவும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்ப விஷயங்களில் பொறுமை அவசியம். விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் இருக்கும். திடீர் பண வரவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சுமங்கள் புரியவரும்.
புதிய முதலீடுகளால் லாபம் அதிகிரிக்கும்.
Image credits: Freepik