
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, கடினமான காரியங்களையும் எளிதாக செய்ய முடியும். நண்பர்கள் உதவி கரம் நீட்டுவர். கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு மாறும். உத்யோகத்தில் சுமுகமான நிலை உருவாகும்.தொழில் வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். தேவையின்றி கடன் வாங்காதீர்கள். தெய்வ அனுகூலம் சிறப்பாக இருக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். கணவன் மனைவி உறவு பலப்படும் .பணத்தேவைகள் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்பத்தில் சந்தோஷம் கூடும். எதையும் ஒளிவு மறைவின்றி பேசுவது நல்லது. அடுத்தவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். வெளியூர் பயணங்களால் உடல் ஆரோக்கியம் கெடும்.தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. பொருட்களை வாங்கிச் சோ்ப்பதில் ஆா்வம் கூடும். வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம். முன் கோபத்தை தவிற்க்கவும்.புதிய வாய்ப்புகள் உருவாகும் நாள். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் நன்மைகள் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, பல நாட்களாக தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். உடல் நிலை தொந்தரவுகள் முற்றிலும் நீங்கும். வாக்கு வன்மை கூடும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கும். பல புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். வெளிநாட்டு யோகம் உண்டு. உத்யோகம் மாற்றம் ஏற்படும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, எடுத்த வேலைகளில் இழுபறி நிலை நீடிக்கலாம். பொருளாதார நிலை திருப்தி தரும். தடைப்பட்ட திருமணம் விரைவில் முடியும். உத்யோகம் வியாபாரம் தொடர்பான பயணம் ஏற்படும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்பத்தில் உங்கள் கருத்தை ஆதரிப்பர். வெளி உணவுகளை அறவே தவிர்க்கவும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புது தொழில் தொடங்கும் வாய்ப்பு அமையும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தில் இருந்த எதிர்ப்புகள் அடங்கும். மன அழுத்தம் குறையும். பழைய சிக்கலை தீர்க்க புது வழி கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.இன்றும் சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.
மீனம்
மீன ராசி நண்பர்களே, பெற்றோர்களின் ஆலோசனை கிடைக்கும். வீண் பேச்சுக்களை தவிர்க்கவும். உறவினகள் சிலர் உதவி கேட்டு வருவர்.பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும்.
Image credits: Freepik