
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே,மன நிம்மதி கிடைக்கும். குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். உடல் அசதி, மனச்சோர்வு நீங்கும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்டாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.தொழில் வியாபாரங்கள் செழிப்பை தரும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, பண வரவு நன்றாக இருக்கும் பழைய சிக்கலில் ஒன்றை தீர்க்க முடியும். உறவினர்கள் வழியில் வீண் அலைச்சல் ஏற்படும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
இன்று இரவு வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, காரிய தடைகள் விலகும்.குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவு பலப்படும்.எடுத்த சவாலில் வெற்றி கிடைக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும். மன அமைதி பிறக்கும் காரிய அனுகூலம் உண்டாகும். மனபாரம் குறையும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். புதிய வாகன யோகம் உண்டு.உத்யோகத்தில் கவனமாக இருக்கவும்.தொழில்களுக்காக புதிய முதலீடுகள் தவிர்க்கவும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குலதெய்வ பிராத்தனையை நிறைவேற்றவும். விலை மதிப்புள்ள பொருட்களை கவனமாக கையாளவும். முன் கோபத்தை குறைக்கவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.தொழில் வியாபாரத்தில் அலைச்சல் அதிகமாகும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே,பழைய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். மனதில் புதிய சிந்தனைகள் உதிக்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க பழகவும்.பண விவகாரங்களில் கவனம் தேவை தேவையின்றி கடன் வாங்காதீர்கள். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, மன அமைதியும் சந்தோஷமும் கிடைக்கும்.புதிய பாதையில் பயணிக்க விருப்பம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். தள்ளிப் போன காரியங்கள் விரைவில் முடியும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, திட்டமிட்டப்படி பயணங்களை மேற்கொள்ள முடியும். மற்றவர்களுக்கு உதவி செய்வதால் மகிழ்ச்சி உண்டாகும்.கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். உறவினர்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்ப ரகசியங்களை பாதுகாக்கவும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். எதிரிகளின் பலம் குறையும். உத்யோகத்தில் மனநிம்மதி கிடைக்கும்.ராசியில் சந்திரன் சஞ்சரிப்பதால் மனக்குழப்பம் காணப்படும் யாருக்கும் வாக்குறுதிகளை வழங்க வேண்டாம்.
கும்பம்
கும்ப துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தின் மீது கூடுதல் கவனம் தேவை. வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். நல்ல தகவல் ஒன்று காதில் விழும்.பழைய கடன் ஒன்று வசூல் ஆகும்.வாகன மாற்றம் ஏற்படும் . உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். எதிர்பார்த்த விஷயங்கள் தானாகவே நடக்கும்.யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போட வேண்டாம். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
Image credits: Freepik