
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, ஆன்மீக சிந்தனை மேலோங்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக இருக்கவும்.பண விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே,மனதில் புது உத்வேகம் பிறக்கும். திட்டமிடாத செலவுகளை சமாளிக்க முடியும். குல தெய்வ வழிபாடு நன்மை தரும். சொத்து விவகாரத்தில் வில்லங்கம் இருக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் செழிப்பைத்தரும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தின் அடிப்படை வசதிகள் உயரும். நண்பர்களிடம் விட்டுக்கொடுக்கவும். நடுவில் நின்ற வேலைகள் சீக்கிரத்தில் முடியும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமும் நிதானமும் அவசியம் தேவைற்ற விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்ப வாழ்வில் சில நெருக்கடிகள் வரலாம். பண வரவில் சிக்கல் இருக்கும். கடன் வாங்குவதை தவிர்க்கவும்.பொது விஷயங்களில் ஆர்வம் கூடும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, மனதில் பல நல்ல சிந்தனைகள் தோன்றும். திட்டமிடாத செயல்களால் வீண் விரைய செலவுகள் உண்டாகும்.கணவன் மனைவிக்குள் மன ஸ்தாபங்கள் வரக்கூடும். குடும்ப நபர்களிடம் விட்டுக்கொடுத்து போவது நல்லது. காரிய தடை விலகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, தூர பயணங்களை தவிர்க்கவும்.அலைச்சல் அதிகமாகும் மருத்துவ சிலவுகள் உண்டாகும்.பராமரிப்பு செலவுகள் கூடும். அடுத்தவர்களை நம்பி எந்த காரியத்தையும் ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே,நினைத்த காரியம் கைகூடும். குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிவரும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புது நண்பர்கள் அறிமுகமாவர். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்ப வேலைகளை தனியாளாக நின்று செய்ய முடியும். வாகன பராமரிப்பு சிலவுகள் உண்டாகும். மன சஞ்சலங்கள் நீங்கும். கடன் பிரச்சனை குறையும். பழைய நண்பனை சந்தித்து மகிழ்வீர்கள்.தொழில், வியாபாரம் செழிப்படையும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, எதிலும் வித்யாசமான அணுகுமுறையை கையாளவும். பெற்றோர்களின் ஆசையை பூர்த்தி செய்ய முடியும். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். காரிய அனுகூலம் உண்டாகும் உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் லாபத்தை காணலாம்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, வீட்டில் பொருள் சேர்க்கை ஏற்படும்.கடன் சுமைகள் குறையும். மன அழுத்தம் குறையும். காணமல் போன பொருள் ஒன்று கிடைக்கும்.பொதுநலத் தொண்டில் ஆர்வம் உண்டாகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, பழைய இனிமையான சம்பவங்கள் நினைவுக்கு வரும். நெருக்கமானவர்களை அனுசரித்துச் செல்லவும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் மனக்குழப்பம் காணப்படும் யாருக்கும் வாக்குறுதிகளை வழங்க வேண்டாம்.
மீனம்
மீன ராசி நண்பர்களே,நினைத்த காரியம் கைகூடும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். சமுதாயத்தில் அந்தஸ்து உயரும். அரசியல் செல்வாக்கு கூடும்.நெருங்கிய உறவினர்களின் ஆதரவு பெருகும். சொந்த பந்தங்களின் சந்திப்பு நிகழும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்
image credits: Freepik