
ஓக்ரா என்றால் வெண்டைக்காய். வெண்டைக்காயை 24 மணி நேரம் ஊறவைத்து அந்த தண்ணீரைக் குடிப்பதால் நிறைய நன்மைகள் உள்ளது என்கின்றனர். இதை எப்போது குடிக்க வேண்டும், குடிப்பதால் பக்கவிளைவுகள் உண்டா என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
வெண்டைக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சரியான அளவில் கூற முடியாது என்றாலும் அதில் நிறைய வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளது. உதாரணத்திற்கு, நார்சத்து- 3 கிராம், வைட்டமின் சி- 24%. நன்மைகள் நிறைய அடங்கியுள்ள வெண்டைக்காய் தண்ணீரை எப்போது குடிக்கலாம்.
வெண்டைக்காயை சிறிய துண்டுகள் அல்லது நீட்டிய அளவில் வெட்டி அதை ஒருநாள் இரவு முழுவதும் ஊறவைக்கவும். மறுநாள் அதில் உள்ள வெண்டைக்காயை வடிகட்டி தண்ணீரை குடிக்க வேண்டும். இதை காலை வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. இவ்வாறு குடிப்பதால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் முழுவதுமாக உறிஞ்சுக் கொள்ள உதவுகிறது.
ஆனால காலையில் குடிப்பதால் மட்டுமே இது பலன் கொடுக்கும் என்று எவ்வித ஆராய்ச்சியும் இல்லை. அதனால் உங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் இதைக் குடிக்கலாம்.
வெண்டைக்காய் தண்ணீர் குடிப்பதால் பக்கவிளைவுகள் உண்டா?
பொதுவாக இதைக் குடிப்பதால் பிரச்னைகள் ஏதும் இல்லை. ஆனால் வெண்டைக்காய் அலர்ஜி உள்ளவர்கள் எடுத்துக் கொண்டால் பக்கவிளைவுகள் உண்டாகலாம். வெண்டைக்காயில் பிராக்டான்கள் அதிகம் உள்ளதால் அதிகம் உட்கொள்வதால் சிலருக்கு ஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.
உங்களுக்கு இது போல் பிரச்னைகள் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசித்த பிறகு இதை நீங்கள் குடிக்கலாம். href=”https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC3934501/”>