pengal.

pengal.

Get In Touch

ஸ்டடி ரூம் இப்படி இருந்தா பசங்க சூப்பரா படிப்பாங்க!


குழந்தைகள் படிப்பதற்கு ஏற்ற அமைதியான சூழலை உருவாக்கிக் கொடுப்பது பெற்றோரின் முக்கியமான பொறுப்புகளில் ஒன்று. இதற்காகவே பலரும் வீட்டில் தனியாக ஸ்டடி ரூம் எனப்படும் படிக்கும் அறையை உருவாக்குகிறார்கள்.

ஆனால் கவனச்சிதறல் இல்லாத இடம், போதுமான வெளிச்சம், நல்ல காற்றோட்டம் எனப் படிப்பதற்குத் தேவையான வசதிகள் அந்த அறையில் இருக்க வேண்டும் என்பதே முக்கியம். 

உங்க வீட்டில் குழந்தைகள் இருந்தால் குழந்தைகள் ஆர்வத்துடன் படிக்க சூப்பரான ஸ்டடி ரூம் உருவாக்குவது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

சரியான இடம் முக்கியம்

ஸ்டடி ரூம் அமைப்பதற்கு முன்பு அதற்கான இடத்தைச் சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். வீட்டில் அதிக நடமாட்டம் இல்லாத, குழந்தைகளின் கவனம் சிதறாத இடமாக அது இருக்க வேண்டும்.

புதிதாக வீடு கட்டுபவர்கள் இதற்காகத் தனி அறையைத் திட்டமிடலாம். ஏற்கனவே வீடு கட்டியிருந்தால், வீட்டின் அமைதியான மூலைப் பகுதியைத் தேர்ந்தெடுத்து படிக்கும் இடமாக மாற்றலாம். அதிக இடவசதி இல்லை என்பவர்கள் கார்ட்போர்டு கொண்டு தடுத்து அவர்களுக்கு சிறிய இடத்தை உருவாக்கலாம். 

சத்தம் வேண்டாம்

தொலைக்காட்சி இருக்கும் அறை, சமையலறை போன்றவற்றுக்கு அருகில் ஸ்டடி ரூம் எப்போதும் இருக்க கூடாது. அதே போன்று வரவேற்பறை, விருந்தினர் அறையும் தவிர்க்க வேண்டும். அங்கிருந்து வரும் சத்தங்கள் குழந்தைகளின் கவனத்தைச் சிதறடிக்க செய்யும். 

எனவே, வெளிப்புறச் சத்தங்களும் வீட்டில் ஏற்படும் தேவையற்ற இரைச்சல்களும் குறைவாக இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இடம் அதிகமில்லை என்பவர்கள் குழந்தைகள் படிக்கும்போது டிவி சத்தத்தை குறைத்து வைக்க வேண்டும். அவர்கள் படிக்கும்போது அவர்கள் மீதும் ஒருகண் இருக்கட்டும். 

வெளிச்சம் இருக்கட்டும்

படிக்கும் அறையில் போதுமான வெளிச்சம் இருப்பது அவசியம். குறிப்பாக, சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் ஸ்டடி ரூமை அமைப்பது நல்லது.

அதிக ஜன்னல்கள் கொண்ட அறையைத் தேர்ந்தெடுக்கலாம். அறையில் இயற்கையான வெளிச்சம் குறைவாக இருந்தால், அதற்கேற்ற விளக்குகளைப் பயன்படுத்தலாம். இருட்டான சூழலில் படிப்பதைத் தவிர்த்து, கண்களுக்கு வசதியான வெளிச்சத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தோட்டம் இருக்கும் வீடு எனில் ஜன்னல் வழியாக தோட்டமும் இயற்கை காட்சிகளும் இருக்கும்படி அமைத்தால் நன்றாக படிப்பார்கள். 

இந்த மூன்று விஷயங்களில் கவனம் செலுத்தினாலே குழந்தைகளின் படிப்பு நன்றாக இருக்கும்.
pengal
Author

pengal