ஒரு கல்லூரி விழா ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கிருந்த மாணவிகளிடம் கேன்சர் பற்றி பேசும்போது ஒரு மாணவி கறுப்பு நிற பிரா அணிந்தால் கேன்சர் வரும் என்று ஒரு தோழி சொன்னாள் உண்மையா? என்று கேட்டார். இன்னொரு மாணவி இரவு நேரத்தில் பிரா அணிந்தாலும் கேன்சர் வருமாமே என்றார். கேன்சர் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பதைவிட தவறான கட்டுக்கதைகளை அவர்கள் மனதில் இருந்து வெளியேற வேண்டுமென்று நினைத்தேன். அப்படி அவர்கள் கேன்சர் குறித்து கேட்ட கேள்விகளுடன் பொதுவாக கேன்சர் பற்றி உலவும் கட்டுக்கதைகளையும் இங்கு பெண்கள் உடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்கிறார் Dr Rathnadevi, Sr.consultant Radiation oncology, Apollo hospitals, Chennai.
பயாப்ஸி செய்தால் கேன்சர் பரவும்?
இது உண்மையில் கட்டுக்கதை. இது மிக மிக அரிது. என்ன விதமான கேன்சர் என்பதை கண்டறிய பயாப்ஸிதான் உதவும்.
மேமோகிராம் பரிசோதனையில் ரேடியேஷன் இருப்பதால் கேன்சர் வருமா?
மேமோகிராம் செய்யும் போது வரக்கூடிய ரேடியேஷன் மிக மிக குறைவு. உண்மையில் இதை செய்வதால் கேன்சரை முன்கூட்டியே கண்டறிய முடியும். சிகிச்சை செய்வதும் எளிதாக இருக்கும். மார்பகத்தை அகற்றாமல் கட்டியை மட்டும் அகற்றலாம். அதோடு இந்த பரிசோதனிக்கான கட்டணமும் குறைவு.
கறுப்பு நிற பிரா அணிந்தால் கேன்சர் வருமா?
உண்மையில் கறுப்பு நிறத்துக்கும் கேன்சருக்கும் எந்த சம்பந்தமில்லை.கறுப்பு நிற ஆடைகள் யுவி கதிர்களை உறிஞ்சும். அதே போன்று ‘underwear bra’ எடுப்பான மார்பகத்துக்காக போடுவார்கள். இவையும் கேன்சர் உண்டாக்கும் என்று சொல்வதும் கட்டுக்கதை. இது சருமத்தில் எரிச்சலை உண்டு செய்யும். அந்த ஒயர் காரணமாக.

இரவு நேரத்தில் தூங்கும்போது பிரா அணிந்தால் கேன்சர் வரும்
தூங்கும்போது பிரா அணிவதால் கேன்சர் வரும் என்பதற்கான ஆய்வு இல்லை. சருமம் சுவாசிக்கும் வகையிலான துணிகள் இருக்க வேண்டும். பருத்தி ஆடைகளாக இருந்தால் இறுக்கம் இல்லாமல் ரிலாக்ஸாக இருக்கும்.
மார்பகம் சிறியதாக இருந்தால் கேன்சர் வராது
மார்பகம் சிறியதாக இருந்தால் கேன்சர் வராது. பெரிய மார்பகம் இருப்பவர்களுக்குத்தான் கேன்சர் வரும் என்று சொல்வதும் கட்டுக்கதை. மார்பகத்தின் அளவுக்கும் மார்பக புற்றுநோய்க்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.
மார்பக கட்டி வந்தாலே அது கேன்சர் கட்டிதான்
இல்லை. எல்லா கட்டிகளும் கேன்சர் கட்டிகள் இல்லை. மருத்துவர் அணுகினால் உரிய பரிசோதனைக்கு பிறகே உறுதி செய்வார். ஆனால் மார்பக புற்றுநோயை பொறுத்தவரை சுய பரிசோதனை செய்வது மிகவும் அவசியம். மாதவிடாய் முடிந்த குறிப்பிட்ட சில நாட்களில் சுய பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
BRCA1 and BRCA 2 நேர்மறையாக இருந்தால் கேன்சர் வரும்!
மரபாகப் பெறப்பட்ட harmful/pathogenic BRCA1 அல்லது BRCA2 variant இருந்தால் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் lifetime risk கணிசமாக அதிகரிக்கும். NCI தரவின்படி, BRCA1/BRCA2-ல் தீங்கு விளைவிக்கும் மாற்றம் உள்ள பெண்களுக்கு lifetime breast cancer risk 60%க்கும் மேல் இருக்கலாம். ஆனால் “positive என்றால் நிச்சயம் cancer வரும்” என்று அர்த்தமில்லை. புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அணுகி அவரின் பரிந்துரையின் பெயரில் மட்டுமே செய்ய வேண்டும். மேமோகிராம் பரிசோதனை எல்லோரும் செய்யலாம். இந்த பரிசோதனைகள் மட்டும் மருத்துவரின் பரிந்துரையில் செய்ய வேண்டும்.
புற்றுநோய் குறித்து பரவும் கட்டுக்கதைகளை நம்புவதைக் காட்டிலும், அறிவியல் உண்மைகளைத் தெரிந்துகொள்வதே மிகவும் அவசியம்.
உடலில் ஏற்படும் மாற்றங்களை அலட்சியப்படுத்தாமல், சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி உரிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆரம்பத்திலேயே கண்டறிவது பல வகையான புற்றுநோய்களுக்கு சிறந்த சிகிச்சை வாய்ப்புகளை அளிக்கிறது.
கட்டுக்கதைகளை விட்டு விலகி, உண்மைகளை அறிந்து புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை வளர்ப்போம்.










