ஆரோக்கியம்

H1N1: பன்றிக்காய்ச்சல் அறிகுறி இப்படிதான் இருக்குமாம்!

கோடை முடிந்து மழைக்காலத்தை எதிர்நோக்கும்போதே காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்னைகளும் றெக்கை கட்டிக்கொண்டு வந்துவிடுகிறது. அடினோ வைரஸ், ரைனோ வைரஸ் போன்றவற்றால் வரக்கூடிய இது ஃப்ளூ என்று சொல்கிறோம். பன்றிக்காய்ச்சல் என்று அழைக்கப்படும் H1N1 ஆனது இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸின் ஒரு வகை. இது சுவாச நோய்த்தொற்றை ஏற்படுத்தும். சமீப வாரங்களாக பன்றிக்காய்ச்சல் தொற்று அதிகரித்துவருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தொற்றுகள் என்றாலே குழந்தைகளையும் வயதானவர்களையும் பாதிக்கும் நிலையில் பன்றிக்காய்ச்சல் குறித்து குழந்தை நல நிபுணர் டாக்டர் பிரிதிவ்ராஜ் விளக்கினார்.

பன்றிக்காய்ச்சல் என்றால் என்ன?

இன்ஃப்ளூயன்ஸா வைரஸில் ஏ,பி,சி,டி என்று நான்கு வகை உண்டு இவை எல்லாமே சீஸன் நேரத்துக்கு வந்து செல்லும். இதில் H1N1 மற்றும் H1N3 என்னும் வைரஸ் தான் பன்றிக்காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது. பன்றிகளுக்கு பரவக்கூடிய இந்த வைரஸ் சில நேரங்களில் மனிதனுக்கு பரவுகிறது.குறிப்பாக மழை மற்றும் குளிர்காலங்களில் இதன் தாக்கம் இருக்கும்.

பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள்

சளி
இருமல்
தலைவலி
திடீர் காய்ச்சல்
நடுக்கம்
வறட்டு இருமல்
மூக்கு ஒழுகுதல்
தொண்டைவலி
உடல் சோர்வு
வயிற்றுப்போக்கு
தசைவலி
காய்ச்சல் போன்றே இருக்கும்

ஆரம்ப நிலையில் மூக்கு, தொண்டை போன்ற உறுப்புகளை பாதிக்கும். மூக்கிலிருந்து நீர்வடியும், தொண்டையில் வலி உடன் காய்ச்சலை ஏற்படுத்தும். சிலருக்கு காய்ச்சல் தீவிரமாக இருக்காது பெரும்பாலும் சாதாரண காய்ச்சல் போன்று தானாகவே சரியாகிவிடுவார்கள்.

சுவாசிப்பதில் சிரமம், மார்பு இறுக்கம், நீல நிற உதடுகள், கடுமையான நீர்ச்சத்து குறைபாடு கொண்டிருந்தால் உடனடி சிலருக்கு தீவிர காய்ச்சல் இருக்கும். மிகத் தீவிர நிலையில் உயிர் இழப்பையும் உண்டு செய்துவிடும். அதனால் தான் அறிகுறிகளை அலட்சியம் செய்யக்கூடாது.

Interviewed doctor

பன்றிக்காய்ச்சல் காரணங்கள்

நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்
5 வயதுக்குட்பட்ட குழந்தைகள்
வயதானவர்கள்
நீரிழிவு நோயாளிகள்
நுரையீரல் பிரச்னை


பன்றிக்காய்ச்சல் தொற்றுநோயா?

ஆம், இருமும் போதும் தும்மும்போதும் இந்த வைரஸானது அருகில் இருப்பவர்களுக்கு பரவும். எச்சில் மற்றும் சளி மூலம் பரவும்.
காற்றின் மூலம் வேகமாக பரவக்கூடும். ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதியானால் வீட்டில் மற்ற அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். இது தொற்றை உண்டு செய்யும் என்பதால் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளானவர்களை தனிமையில் வைத்திருக்க வேண்டும்.


பன்றிக்காய்ச்சல் பெருந்தொற்றாக மாறுமா?

இந்திய மருத்துவ சங்கம் (ICMR) பன்றிக்காய்ச்சல் குறித்து அச்சப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் தற்போது பன்றிக்காய்ச்சலில் புதிய மரபணு மாற்றங்கள் எதுவும் கண்அறியப்படவில்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் பெரும்பாலும் இவை தானாக சரியாக கூடியவை என்பதால் அச்சம் வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க

குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை உணவுக்கு முன்பும் பின்பும் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். குறிப்பாக கழிப்பறை பயன்படுத்திய பிறகு >கூட்டம் நிறைந்த இடங்களை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத நிலையில் முகக்கவசம் போடுவது தொற்றிலிருந்து தவிர்க்க செய்யும்.
குழந்தைகளுக்கு காய்ச்சல் வரும்போது பள்ளிக்கு அனுப்புவதை தவிர்ப்பதே நல்லது. ஒவ்வொரு ஆண்டும் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி போடுவது காய்ச்சல் வராமல் தடுக்கும் வந்தாலும் தீவிரமாக இருக்காது. குறிப்பாக குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள், சுவாச பிரச்னைகள் கொண்ட நோயாளிகளுக்கு இந்த தடுப்பூசி அவசியம்.

What's your reaction?

Excited
0
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0

You may also like

ஆரோக்கியம்

தேசிய ஊட்டச்சத்து மாதம்: ஆரோக்கியமான உணவு பழக்கம் வீட்டிலிருந்தே தொடங்கட்டும்

நல்லா சாப்பிடு என்று சொன்றோமே சாப்பிடறதுன்னா என்ன தெரியுமா? வயிறு நிறைய சாப்பிடறதா? பிடிச்ச உணவை சாப்பிடறதா இல்ல விலை ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

ஆரோக்கியம்

ரேஷன் அரிசி சர்க்கரை நோயை குறைக்குமா?

சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் கே.என்.நேரு பேசும்போது ரேஷன் அரிசி ரத்தச் சர்க்கரையைக் குறைக்கும் என்று கூறியிருந்தார். தற்போது இது குறித்து ...
lady sugar testing with the fenugreek image below ஆரோக்கியம்

வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க சுகர் சர்ருன்னு குறையும்…

வெந்தயம் வெந்தயம் பசை போன்று வழுவழுப்பாக இருக்கும்.இதன் சுவை கசப்புத்தனை கொண்டது என்பதால் இதை தனித்து எடுப்பதில்லை. தாளிப்பு பொருள்களுடன் ...
pregnant women with tablets ஆரோக்கியம்

கர்ப்பிணிகளுக்கு ஏன் ஃபோலிக் அமிலம் முக்கியம்? தினமும் எவ்வளவு தேவை?

கர்ப்ப காலத்தில் மட்டும் அல்ல கர்ப்பத்துக்கு தயாராவதற்கு முன்பே வேண்டிய வைட்டமின்களில் முக்கியமானது தான் இந்த ஃபோலிக் ஆசிட்.ஃபோலிக் ஆசிட் ...