எண்டோமெட்ரியோசிஸ் வந்தால் செயற்கை கருத்தரிப்பு தான் தீர்வா? அறிகுறிகள், சிகிச்சை முறைகள்!
- by Pengal in
- Nov 4, 2026
- 20 Mins
எண்டோமெட்ரியோசிஸ் இருந்தால் கருத்தரிக்குமா?
இன்றைய இளம்பெண்கள் பலரும் எண்டோமெட்ரியோசிஸ் பிரச்னையைக் கொண்டிருக்கிறார்கள். மாதவிடாய் காலத்தில் தாங்க முடியாத வலி தொடங்கி தீவிர நிலையில் சில பெண்களுக்கு கருவுறுவதிலும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எண்டோமெட்ரியோசிஸ் என்பது
கர்ப்பப்பையின் உட்புறத்தில் இருக்கும் மெல்லிய திசுப்படலம் எண்டோமெட்ரியம் மாதவிடாய் காலத்தில் இந்தத் திசுப்படலம் உதிர்ந்து ரத்தப்போக்காக வெளியேறும்.
இதில் பிரச்சினை ஏற்பட்டால் கர்ப்பப்பையின் உட்புறத்தில் இருக்கும் திசுக்களைப் போன்ற திசுக்கள் கர்ப்பப்பைக்கு வெளியே கருப்பைக் குழாய்கள், சினைப்பைகள், குடல் மற்றும் சிறுநீர்ப்பை போன்ற இடங்களில் இவை காணப்படலாம்.
இது திருமணமான பெண்களுக்கு மட்டுமே ஏற்படும் பிரச்சினை என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இது பருவமடையும் வயதிலேயே தொடங்கலாம். அதாவது, டீன் ஏஜ் பெண்களுக்குக்கூட இந்தப் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.
எண்டோமெட்ரியோசிஸ் அறிகுறிகள்.
மாதவிடாய் நேரத்தில் கடுமையான வயிற்றுவலி.
வலி காரணமாக அன்றாட வேலைகளைச் செய்ய முடியாமல் போவது.
அதிகமான மாதவிடாய் ரத்தப்போக்கு.
தாம்பத்திய உறவின்போது வலி ஏற்படுவது.
குடல் பகுதியில் பாதிப்பு இருந்தால் மலம் கழிக்கும்போது வலி அல்லது மலச்சிக்கல் ஏற்படுவது.
சிறுநீர்ப்பை பாதிக்கப்பட்டால் சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது சிலருக்கு ரத்தம் வெளியேறுவது.
சிலருக்கு அறிகுறிகள் மிகவும் தீவிரமாகவும், சிலருக்கு லேசாகவும் இருக்கலாம்.
பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வயிற்றுவலி ஏற்படுவது பொதுவானதுதான். ஆனால், சிலருக்கு வலி தீவிரமாக இருக்கும். இதனால் பள்ளிக்குச் செல்ல முடியாமலும், அன்றாட வேலைகளைச் செய்ய முடியாமலும் வீட்டிலேயே இருப்பார்கள். இதுபோன்ற வலியைச் சாதாரண மாதவிடாய் வலி என்று நினைத்து அலட்சியம் செய்யக்கூடாது.
வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக்கொண்ட பிறகும் வலி குறையவில்லை என்றாலோ, ஒவ்வொரு மாதமும் கடுமையான வலி தொடர்ந்தாலோ டாக்டரை பார்க்க வேண்டும்
எண்டோமெட்ரியோசிஸ் வந்தால் செயற்கை கருத்தரிப்பா?
எண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பு உள்ள அனைவருக்கும் செயற்கை கருத்தரிப்பு அவசியம் என்று சொல்ல முடியாது. சில பெண்களுக்கு மருந்துகள் அல்லது லேப்ராஸ்கோபி சிகிச்சை மூலம் பாதிப்பைக் கட்டுப்படுத்தி இயற்கையான முறையில் கருத்தரிப்பதற்கான வாய்ப்பை உருவாக்க முடியும்.
மேலும், எண்டோமெட்ரியோசிஸ் காரணமாக தாம்பத்திய உறவின்போது கடுமையான வலி ஏற்படலாம். இதனால் சில பெண்கள் உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் நிலையும் உருவாகலாம். சிகிச்சை மூலம் இந்தப் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்த முடியும். பாதிப்பின் தன்மை, வயது, சினைப்பையின் செயல்பாடு மற்றும் குழந்தைப்பேறு தொடர்பான காரணங்களைப் பொறுத்து சிகிச்சையைத் தேர்வு செய்ய வேண்டும்.
pengal
Hot Categories
Recent News
Daily Newsletter
Get all the top stories from Blogs to keep track.








