Title: கோயில்களில் மறந்தும் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
- by Neela Vijayakumar
- Nov 4, 2026
- 20 Mins
கோயில்களில் மறந்தும் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்வார்கள். தினமும் வீட்டில் கடவுளை வணங்கினாலும், கோயிலுக்கு நேரில் சென்று சாமி தரிசனம் செய்வது மகிழ்ச்சியையும் மனநிம்மதியையும் அதிகரிக்கவே செய்யும். கோயிலுக்குச் சென்றாலே மனதில் இருக்கும் கவலைகள் குறைந்து ஒருவிதமான தெளிவு கிடைக்கும் என்று பலரும் நம்புகின்றனர். அப்படி கோயிலுக்குச் செல்லும்போது சரியான முறையில் வழிபடுகிறோமா?
கோயிலில் என்ன செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஒவ்வொரு கோயிலுக்கும் சில வழிபாட்டு முறைகளும் பாரம்பரிய நடைமுறைகளும் உள்ளன. கோயில்களில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
கோயில்களில் செய்யக்கூடாத விஷயங்கள்!
முதலில் கோயில் என்பதன் பொருளைத் தெரிந்துகொள்வோம். 'கோ' என்றால் கடவுள் அல்லது அரசன் என்று பொருள். 'இல்' என்றால் குடியிருக்கும் இடம் என்று அர்த்தம். அதாவது, இறைவன் குடியிருக்கும் இடமே கோயில் என்று அழைக்கப்படுகிறது. அத்தகைய புனிதமான இடத்திற்குச் செல்லும்போது சில விஷயங்களைத் தவிர்க்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
கோயிலில் உள்ள நிழல்களை மிதிக்கக்கூடாது!
கோயிலில் இருக்கும் கொடிமரம், நந்தி மற்றும் பலிபீடம் ஆகியவற்றின் நிழல்களை மிதிக்கக்கூடாது என்பது பாரம்பரிய நம்பிக்கையாக உள்ளது.
அபிஷேகம் நடக்கும்போது கோயிலை வலம் வரக்கூடாது!
விசேஷ நாட்களில் கோயில்களில் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறும். அந்த நேரத்தில் கோயிலைச் சுற்றி வரக்கூடாது என்று கூறப்படுகிறது. அபிஷேகம் முடிந்த பிறகே வழக்கமான வழிபாடுகளைத் தொடர வேண்டும்.
கோயிலுக்குள் தூங்கக்கூடாது!
சிலர் மதிய நேரங்களில் ஓய்வெடுப்பதற்காகக் கோயிலுக்குச் செல்வார்கள். அப்போது களைப்பின் காரணமாக கோயிலிலேயே தூங்கிவிடுவதும் உண்டு. ஆனால், கோயில் இறைவனை வழிபடும் இடம் என்பதால் அங்கு தூங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
நந்தி சிலையைத் தொட்டு காதில் வேண்டுதல் சொல்லக்கூடாது!
சிவன் கோயில்களில் நந்தியின் காதில் நம்முடைய வேண்டுதல்களைக் கூறினால் அது இறைவனைச் சென்றடையும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் பலரும் நந்தியின் காதில் தங்களுடைய வேண்டுதல்களைக் கூறுவார்கள். ஆனால், நந்தி சிலையையோ மற்ற தெய்வங்களின் சிலைகளையோ தொட்டுத் தொழக்கூடாது என்று பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் கூறப்படுகிறது.
விளக்கு ஏற்றப்படாத நேரத்தில் வணங்கக்கூடாது!
கோயிலுக்குள் சன்னிதியில் விளக்கு எரியாத நேரத்தில் இறைவனை வணங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
கோயிலுக்குள் மனிதர்களின் காலில் விழுந்து வணங்கக்கூடாது!
கோயிலுக்குள் சென்ற பிறகு இறைவனை மட்டுமே வழிபட வேண்டும். அங்கு மற்ற மனிதர்களின் காலில் விழுந்து வணங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
வாசனை இல்லாத மலர்களை இறைவனுக்குச் சமர்ப்பிக்கக்கூடாது!
இறைவனை வழிபட பூக்களைத் தேர்வு செய்யும்போது வாசனை இல்லாத மலர்களைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
வேகமாகக் கோயிலை வலம் வரக்கூடாது!
இறைவனை வழிபட்டு கோயிலைச் சுற்றி வரும்போது அவசரமாக நடக்கக்கூடாது. அமைதியாகவும் நிதானமாகவும் இறைவனை நினைத்தபடி வலம் வர வேண்டும்.
பலிபீடம், லிங்கம் மற்றும் நந்திக்கு இடையில் செல்லக்கூடாது!
கோயில்களில் உள்ள பலிபீடத்திற்கும் தெய்வங்களின் சன்னிதிக்கும் இடையில் செல்லக்கூடாது என்று கூறப்படுகிறது. குறிப்பாக, சிவன் கோயில்களில் சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் இடையில் நடந்து செல்வதைத் தவிர்க்க வேண்டு
சிவன் கோயிலிலும் பெருமாள் கோயிலிலும் அமரும் முறைகள் வேறுபடும்!
பாரம்பரிய நம்பிக்கையின்படி சிவன் கோயில்களில் மட்டும் அமர்ந்துவிட்டு வர வேண்டும் என்றும், பெருமாள் கோயில்களில் அமரக்கூடாது என்றும் கூறப்படுகிறது
மண் விளக்குகளைச் சுத்தம் செய்யாமல் ஏற்றக்கூடாது!
கோயில்களில் மண் விளக்குகளைப் பயன்படுத்தும்போது சுத்தம் செய்யாமல் முதலில் விளக்குகளைச் சுத்தம் செய்த பிறகே எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.
புண்ணிய தீர்த்தத்தில் உடனே காலை வைக்கக்கூடாது!
கோயில்களில் உள்ள புனித நீர்நிலைகள் மற்றும் தீர்த்தக் குளங்களுக்குச் செல்லும்போது உடனடியாகக் கால்களை நீரில் வைக்கக்கூடாது என்று கூறப்படுகிறது. முதலில் சிறிது நீரைத் தலையில் தெளித்துக்கொண்ட பிறகே கால்களைக் கழுவ வேண்டும் என்பது பாரம்பரிய வழக்கம்.
இனி கோயிலுக்குச் செல்லும்போது இதையெல்லாம் கவனத்தில் வைத்துகொள்ளுங்கள்.
pengal
Hot Categories
Recent News
Daily Newsletter
Get all the top stories from Blogs to keep track.








