ஆன்மிகம்
நவக்கிரகங்களை எத்தனை முறை சுற்ற வேண்டும்? வழிபடும் முறை
- by Neela Vijayakumar
- Nov 5, 2026
- 20 Mins
நவக்கிரகங்களை வலம் வருவது எப்படி?
நவம் என்றால் ஒன்பது என்று அர்த்தம். கிரகம் என்றால் ஈர்க்கும் சக்தி கொண்ட கோள். நமது உடல் மற்றும் விதியில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவது நவகிரகங்கள் என்று முன்னோர்கள் கணித்திருக்கிறார்கள்.
அதனால்தான் கோயில்களுக்குச் செல்லும்போது நவக்கிரகங்களை வழிபட்டு வலம் வருவதை கவனமாக செய்கிறோம். ஆனால், நவக்கிரகங்களை எத்தனை முறை சுற்ற வேண்டும், எந்தத் திசையில் சுற்ற வேண்டும் என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கும்.
சிலர் ஒரு முறை சுற்றுவார்கள். சிலர் மூன்று அல்லது ஒன்பது முறை சுற்றுவார்கள்.அதைத் தான் இப்போது பார்க்க போகிறோம்.
நவக்கிரகங்கள் ஏன் முக்கியம்?
ஜோதிட நம்பிக்கையின்படி, ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படும் நன்மை, தீமைகளுக்கு நவக்கிரகங்களின் அமைப்பும் இயக்கமும் காரணமாகக் கருதப்படுகின்றன. ஒருவர் முற்பிறவியில் செய்த நல்வினைகளுக்கு நன்மைகளும், தீவினைகளுக்குத் தோஷங்களும் கிடைப்பதாக நம்பப்படுகிறது.
மேலும், ஒவ்வொரு கிரகமும் மனித வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது. அந்த வகையில், நவக்கிரகங்களை வழிபடுவது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
நவக்கிரகங்களை எத்தனை முறை சுற்ற வேண்டும்?
நவக்கிரகங்களை மொத்தம் ஒன்பது முறை சுற்றி வர வேண்டும் என்பது ஒரு வழிபாட்டு முறையாகக் கூறப்படுகிறது.
அதில் முதல் ஏழு சுற்றுகளை வலப்புறமாகவும், அடுத்த இரண்டு சுற்றுகளை இடப்புறமாகவும் சுற்ற வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
இதற்குக் காரணமாக, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாகச் சுற்றுவதாகவும், ராகு மற்றும் கேது வலமிருந்து இடமாகச் சுற்றுவதாகவும் ஜோதிட மரபில் சொல்லப்பட்டுள்ளது. அதன்படியே இடம், வலம் சுற்றவேண்டும்.
ஒருமுறை மட்டும் சுற்றலாமா?
சிலருக்கு உடல்நிலை அல்லது வேறு தவிர்க்க முடியாத காரணங்களால் ஒன்பது முறை சுற்ற முடியாமல் போகலாம். அப்படிப்பட்டவர்கள் ஒருமுறை சுற்றும்போது கீழே உள்ள மந்திரத்தைச் சொல்லி வழிபடவேண்டும்,
‘ஓம் ஆதித்யாய ச சோமாய மங்களாய புதாய ச குரு சுக்ர சனிப்யச்ச ராகவே கேதவே நமஹ’
சிலர் வலப்புறம், இடப்புறம் என்ற வேறுபாட்டைக் கவனிக்காமல் ஒன்பது முறை சுற்றினாலே போதும் என்றும் சொல்வதுண்டு. ஆனால் முறையாக
நவக்கிரகங்களை வழிபடும்போது கவனிக்க வேண்டியவை!
கோயிலில் உள்ள தெய்வங்கள் அனைத்தையும் வணங்கி வழிபட்டு, இறுதியாக நவக்கிரகங்களைச் சுற்றி வர வேண்டும் என்கிறது ஆலய வழிபாட்டு முறை. மேலும், நவக்கிரகச் சிலைகளை கையால் தொட்டு வணங்கக் கூடாது.
நவக்கிரகங்கள் நன்மை, தீமைகளை எப்படித் தீர்மானிக்கின்றன?
ஜோதிட நம்பிக்கையின்படி, மனித உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு கிரகம் அதிகாரம் செலுத்துவதாகக் கூறப்படுகிறது. ஒருவர் முற்பிறவியில் செய்த வினைகளுக்கு ஏற்ப, அவருடைய தசா புத்தி காலங்களில் நவக்கிரகங்கள் பலன்களை வழங்குவதாக நம்பப்படுகிறது.
அதனால்தான் நவக்கிரகங்களை வழிபடுவதுடன், அவற்றை முறையாக வழிபடும் முறையையும் தெரிந்துகொள்வது அவசியமாகக் கருதப்படுகிறது.
Author
pengal
Hot Categories
Recent News
Daily Newsletter
Get all the top stories from Blogs to keep track.








