pengal.

pengal.

Get In Touch

சிவனுக்கு சொந்த ஊர் இங்குதான் இருக்கா…?

தமிழகத்தில் எண்ணற்ற சிவத்தலங்கள் இருந்தாலும், ஒவ்வொரு தலத்துக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அந்த வகையில், வரலாறு, ஆன்மிகம், தலபுராணம் எனப் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட முக்கியமான சிவத்தலங்களில் ஒன்று உத்தரகோசமங்கை.  சிவனின் அடி முடியை யாராலும் காண முடியாது என்று சொல்வது போல, இந்தத் தலத்தின் பெருமைகளையும் சொல்லிக்கொண்டே போகலாம். திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பார்கள். அதேபோல், உத்தரகோசமங்கை மண்ணை மிதித்தாலே முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருவாரூரில் பிறந்தால் முக்தி… காசியில் இறந்தால் முக்தி.. திருவண்ணா மலையாரை நினைத்தாலே முக்தி.. ஆனால் உத்தரகோசமங்கை மண்ணை மிதித்தாலே முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை


 திருவாசகத்தில் 38 இடங்களில் இத்தலத்தின் பெருமை சொல்லப்பட்டுள்ளது.  1087 தலம் இருந்தாலும் இது தான் நடராஜருக்கு சொந்த ஊர் என்கிறார் மாணிக்கவாசகர். இந்த ஆலயத்தில் மட்டும் மாணிக்கவாசகருக்கு தனி சன் னிதி அமைக்கப்பட்டுள்ளது. 


மேலும்  வேதவியாசர், மிருகண்டு முனிவர், அரு ணகிரிநாதர், பராசரர் போன்ற மாமுனிகள் இத்தல ஈசனிடம் அருள் பெற்றுள்ளனர். திருவிளையாடற் புராணத்தில் வரும் வலைவீசி மீன்பிடித்த படலம் இத்தலத்தில் நிகழ்ந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். வேதவியாசர், மிருகண்டு முனிவர், அருணகிரிநாதர், பராசரர் போன்ற முனிவர்கள் இத்தலத்து ஈசனை வழிபட்டு அருள் பெற்றதாகத் தல வரலாறு கூறுகிறது. திருவிளையாடற்புராணத்தில் இடம்பெறும் ‘வலைவீசி மீன்பிடித்த படலம்’ இத்தலத்துடன் தொடர்புடையதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


உத்தரகோசமங்கை ஆலயம் ஆதிகாலத்திலேயே உருவான பழமையான சிவத்தலமாகக் கருதப்படுகிறது. ‘ஆதி சிதம்பரம்’ என்றும் இந்தத் தலம் அழைக்கப்படுகிறது. இங்கு நடராஜர் ஆடிய பிறகே சிதம்பரத்தில் நடனம் ஆடினார் என்ற நம்பிக்கையும் உள்ளது. மகா பாரதப் போர் கிமு 3100 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததாக கருதப்படுகிறது. அதன் பிறகே  கலியுகம் பிறந்தது. ஆனால் கலியுகம் பிறப்பதற்கு முன்பே மகாபாரதத்திற்கு முந்தைய காலமான இராமாயணக் காலத்திலேயே இந்தக் கோவில் இருந்ததற்கான கல்வெட்டு குறிப்புக்கள் உள்ளன. 


சூரியன்,சந்திரன்,செவ்வாய் என மூன்று கிரகங்கள் மட்டுமே இத்தலத்தில் இருப்பதால் நவக்கிரகங்கள் 9 என்று அறியப்படாத காலத்திலேயே  உருவாக்கப்பட்ட தலம் என்பது நிரூபணமாகிறது. இராவணனின் மனைவி மண்டோதரி இத்தலத்து இறைவனை வணங்கி சிவபக்தனான இராவணனை இத்திருத்தலத்தில் மணம் புரிந்தாள் என்பதால் இக்கோயில் இராமாயணக்காலத்திலேயே இருந்ததாக சொல்லப்படுகிறது. 

உத்தரகோசமங்கை என்ற பெயருக்குப் பின்னாலும் ஒரு சுவாரஸ்யமான விளக்கம் உள்ளது.


‘உத்தரம்’ என்பது உபதேசம் என்றும், ‘கோசம்’ என்பது ரகசியம் என்றும், ‘மங்கை’ என்பது பார்வதி தேவியைக் குறிப்பதாகவும் கூறப்படுகிறது. பார்வதி தேவிக்கு சிவபெருமான் வேத ஆகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த தலம் என்பதால், ‘உத்தரகோசமங்கை’ என்ற பெயர் ஏற்பட்டதாகத் தல வரலாறு தெரிவிக்கிறது. இறைவனான சிவபெருமான், இறைவியான உமையவளுக்கு வேதத்துடன் நாட்டியத்தையும் காட்டி அருளியதாகவும் நம்பப்படுகிறது.


இந்த ஆலயத்தின் மற்றுமொரு சிறப்பு, இறைவனுக்கும் இறைவிக்கும் தனித்தனிச் சன்னிதிகள் இருப்பதுதான். விமானமும் கோபுரமும் கூட தனித்தனியாக அமைந்துள்ளன. மூலவர் சுயம்புவாக இலந்தை மரத்தடியில் தோன்றியவர் என்பது தல வரலாறு. இந்தச் சுயம்பு லிங்கம் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் பக்தர்கள் நம்புகின்றனர். இத்தலத்தில் மங்களேஸ்வரர், மங்களேஸ்வரி, ஆடல்வல்லான் என மூன்று முக்கிய மூர்த்தங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இங்கு எழுந்தருளியிருக்கும் நடராஜர் மரகதப் பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறார். இத்தலத்தின் தீர்த்தமும் பச்சை நிறத்துடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. தல விருட்சமான இலந்தை மரமும் பசுமை நிறத்துடன் காணப்படுகிறது. இவ்வாறு மூன்றும் பச்சை நிறத்துடன் அமைந்திருப்பது இந்தத் தலத்தின் மற்றுமொரு சிறப்பாகக் கருதப்படுகிறது.


இங்கு ஐந்தரை அடி உயரமுள்ள நடராசர் திருமேனி மரகதத்தால் ஆனது. உலகிலேயே பெரிய மரகதக் கல் இதுவாகத்தான் இருக்கும் என்கிறார்கள். மரகதம் மிகவும் மென்மையானது. விலை மதிப்பில்லாதது. சாதாரண ஒலி கூட மரகதத்தை உதிர வைக்கும் என்று சொல்வதால் அதற்கு சிறிய இடைஞ்சலும் ஏற்படாமல் சந்தனக்காப்பு இடப்படுகிறது. அதனாலே இச்சிலையானது உளி கொண்டு செதுக்காமல் மனத்தால் நினைத்து உருவாக்கப்பட்டது என்று சில ஆன்மிக பெரியார்கள் கூறுகிறார்கள்.


இந்த மரகத நடராஜரை முழுமையான திருமேனியுடன் தரிசிக்கும் வாய்ப்பு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின்போது கிடைக்கிறது. அப்போது சந்தனக்காப்பு களையப்பட்டு நடராஜர் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார். நித்ய அபிஷேகத்திற்கும், சுவாமி உற்சவ உலாவிற்கும் பஞ்சலோகத்தால் ஆன நடராஜர் சிலையும் பயன்படுத்தப்படுகிறது.  நடராஜர் கோயிலுக்கு அருகிலேயே சஹஸ்ர லிங்கக் கோயிலும் தனியாக அமைந்துள்ளது.


சிவனின் அடியையும் முடியையும் காண பிரம்மாவும் விஷ்ணுவும் சென்ற கதையில், தாழம்பூ பொய்யுரைத்ததாகவும், அதனால் சிவபெருமான் தாழம்பூவுக்கு சாபம் அளித்ததாகவும் புராணக் கதை கூறுகிறது. ஆனால் உத்தரகோசமங்கை தலத்தில் தாழம்பூவுக்கு தோஷம் இல்லை என்றும், இங்கு தாழம்பூ சாற்றி சிவனை வழிபடும் வழக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தாழம்பூவுக்கு சிவபெருமான் சாப விமோசனம் அளித்த தலம் என்பதால், இது சாப விமோசனம் அளிக்கும் தலமாகவும் பக்தர்களால் கருதப்படுகிறது.


இயன்றபோது உத்தரகோசமங்கை சென்று  மங்களேஸ்வரரை தரிசித்து வாருங்கள். மங்களம் உண்டாகும்.


pengal
Author

pengal