pengal.

pengal.

Get In Touch

தேசிய ஊட்டச்சத்து மாதம்: ஆரோக்கியமான உணவு பழக்கம் வீட்டிலிருந்தே தொடங்கட்டும்

நல்லா சாப்பிடு என்று சொன்றோமே சாப்பிடறதுன்னா என்ன தெரியுமா? வயிறு நிறைய சாப்பிடறதா? பிடிச்ச உணவை சாப்பிடறதா இல்ல விலை அதிகமான உணவை சாப்பிடணணுமா? இப்படியான கேள்வி உங்களுக்கு இருக்கலாம். இதோ பதிலளிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் பரிமளாதேவி குமாரசாமி, பரிம்ஸ் நியூட்ரிஷியன், கோவை. உண்மையில் நல்ல ஊட்டச்சத்து என்பது இவற்றில் எதுவுமே மட்டும் அல்ல.நாம் சாப்பிடும் உணவில் உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்கள் கிடைக்கிறதா என்பது தான் முக்கியம். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக (Rashtriya Poshan Maah) கடைப்பிடிக்கிறது. இந்த ஆண்டு ‘நமது அங்கன்வாடி நமது பொறுப்பு’ என்ற கருத்தை முன்வைத்து, குழந்தைகள் மற்றும் பெண்களின் ஊட்டச்சத்தில் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் உள்ள பொறுப்பை வலியுறுத்துகிறது. ஒரே உணவு வேண்டாமே நம்மில் பலரது அன்றாட உணவு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற தானிய உணவுகளைச் சுற்றியே இருக்கிறது. இவை நமக்கு தேவையான ஆற்றலைத் தருகின்றன. ஆனால் […]

நல்லா சாப்பிடு என்று சொன்றோமே சாப்பிடறதுன்னா என்ன தெரியுமா? வயிறு நிறைய சாப்பிடறதா? பிடிச்ச உணவை சாப்பிடறதா இல்ல விலை அதிகமான உணவை சாப்பிடணணுமா? இப்படியான கேள்வி உங்களுக்கு இருக்கலாம். இதோ பதிலளிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் பரிமளாதேவி குமாரசாமி, பரிம்ஸ் நியூட்ரிஷியன், கோவை.

உண்மையில் நல்ல ஊட்டச்சத்து என்பது இவற்றில் எதுவுமே மட்டும் அல்ல.நாம் சாப்பிடும் உணவில் உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்கள் கிடைக்கிறதா என்பது தான் முக்கியம்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக (Rashtriya Poshan Maah) கடைப்பிடிக்கிறது. இந்த ஆண்டு ‘நமது அங்கன்வாடி நமது பொறுப்பு’ என்ற கருத்தை முன்வைத்து, குழந்தைகள் மற்றும் பெண்களின் ஊட்டச்சத்தில் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் உள்ள பொறுப்பை வலியுறுத்துகிறது.

ஒரே உணவு வேண்டாமே

நம்மில் பலரது அன்றாட உணவு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற தானிய உணவுகளைச் சுற்றியே இருக்கிறது. இவை நமக்கு தேவையான ஆற்றலைத் தருகின்றன. ஆனால் அதனுடன் காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள், பயறுகள், பழங்கள், பால் மற்றும் பால் பொருள்கள், கொட்டைகள், விதைகள் போன்றவற்றையும் சேர்க்க வேண்டும்.

குறிப்பாக புரதச்சத்து நமது உணவில் போதுமான அளவு இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். புரதம் என்றால் அசைவ உணவுதான் என்பது சரியான புரிதல் அல்ல, பருப்பு, பயறு, கொண்டைக்கடலை, பச்சைப் பயறு, சோயா, கொட்டைகள், விதைகள் போன்ற பல உணவுகளிலிருந்து புரதம் கிடைக்கிறது. முட்டை மற்றும் பிற அசைவ உணவுகளும் நல்ல புரத ஆதாரங்கள்.

அதே போன்று ஆரோக்கியமான உணவு என்றால் அதிக செலவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. நம் ஊரில், நம் வீட்டில் கிடைக்கும் உணவுகளை சரியான முறையில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

nullDoctor's picture


வளரும் குழந்தையின் உணவு

குழந்தைகள் சாப்பிடுவது அவர்களின் எடை மற்றும் உயரத்துக்கு மட்டும் அல்ல, அவர்கள் எப்படி வளர்கிறார்கள், கற்றுக்கொள்கிறார்கள். விளையாடுகிறார்கள். கவனம் செலுத்துகிறார்கள் என்பதற்கும் ஊட்டச்சத்து முக்கியமானது.

குழந்தையின் வாழ்க்கையின் ஆரம்ப வளர்ச்சி கட்டம் மிக மிக முக்கியம் குறிப்பாக 1000 நாட்களில் போதுமான ஊட்டச்சத்து மற்றும் அன்பான பராமரிப்பு கிடைப்பது மூளை வளர்ச்சிக்கும் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமையும்.

குழந்தைதானே கொஞ்சம் தானே சாப்பிடுகிறது என்று அலட்சியம் செய்யாமல் என்ன சாப்பிடுகிறார்கள் உணவில் என்னென்ன சேர்க்கிறார்கள். அதன் வளர்ச்சி சரியாக உள்ளதா என்பதையும் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும்.

அங்கன்வாடி

குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் ஊட்டச்சத்து மற்றும் ஆரம்ப கால பராமரிப்பு கிடைப்பதில் அங்கன்வாடி மையங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

இந்த ஆண்டு Poshan Maah அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் புதிய சத்தான பல்வகை சூடான உணவு, உள்ளூர் உணவு பொருள்களின் பயன்பாடு, வாரந்தோறும் மறுபடும் உணவுப்பட்டியல் மற்றும் உணவின் தரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் இன்னொரு முக்கியமான விஷயம் மக்களின் விழிப்புணர்வு. குழந்தைகளுக்கான அங்கன்வாடியில் என்ன மாதிரியான உணவு வழங்கப்படுகிறது? உணவின் தரம் எப்படி இருக்கிறது போன்ற விஷயத்திலும் சமூக அக்கறையுடன் பெரியவர்கள் இருக்க வேண்டும்.

தாயின் ஊட்டச்சத்து

குழந்தையின் ஆரோக்கியத்தைப் பற்றி பேசும்போது தாயின் ஆரோக்கியத்தையும் நாம் பேச வேண்டும். கர்ப்ப காலத்தில் தாய்க்கு போதுமான மற்றும் சரியான உணவு கிடைப்பது அவசியம். தாயின் உடல்நலம், குழந்தையின் வளர்ச்சி மற்றும் பிரசவம் பிறகு பராமரிப்பு போன்ற அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்டவை.

இந்த ஆண்டு Poshan Maah, Prashan Mantri Matru Vandana Yojana திட்டத்தின் 10 ஆண்டுகளையும் நினைவு கூர்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு கிடைக்ககூடிய ஆதரவு மற்றும் திட்டப் பயனகள் அனைத்தும் அவர்களை சென்றடைவதற்கான விழிப்பு உணர்வும் இங்கு வலியுறுத்தப்படுகிறது.

மாற்றம் வீட்டிலிருந்து

ஊட்டச்சத்து என்னும்போது எரிய விசயங்கள் என்று நினைக்க வேண்டாம். இன்றைய உணவில் ஒரு காய்கறியை கூடுதலாக சேர்ப்பதுடன் சாதத்துடன் பருப்பை மறக்காமல் சேர்ப்பது, குழந்தையின் உணவில் பல்வேறு உணவுகளை அறிமுகப்படுத்துவது பழங்கள் மற்றும் கீரைகள் கண்டிப்பாக சேர்ப்பது பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது, போதுமனா திரவ ஆகாரங்கள் கொடுப்பது என ஊட்டச்சத்தை மேம்படுத்தும் விஷயங்களில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

ஆரோக்கியமான உணவு என்பது சமச்சீரான உணவை திட்டமிட்டு எடுத்துகொள்வது. இந்த தேசிய ஊட்டச்சத்து மாதத்தில் நாம் அனைவரும் செய்ய வேண்டியது என் தட்டில் இன்று பல்வகையான சத்தான உணவு இருக்கிறதா? இது ஒருநாள் அல்ல வாழ்நாள் முழுவது, தொடரவேண்டிய ஒரு பழக்கம்.

pengal
Author

pengal