இன்று உலக தற்கொலைத் தடுப்பு தினம். 2003 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு இந்த தற்கொலை தினத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10 ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தற்கொலையால் உயிரிழந்தவர்களை நினைவுகூரவும், போராடுபவர்களுக்கு ஆதரவு அளிக்கவும், சமூக அளவிலான நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் தற்கொலை தடுப்பு நிகழ்வுகள், பிரச்சாரங்கள் மற்றும் கல்விச் செயல்பாடுகள் நடத்தப்படுகின்றன. உலகில் அதிக தற்கொலைகள் நடைபெறும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது. இந்நிலையில் இன்றைய தலைமுறையினரில் தற்கொலை செய்துகொள்வதன் விகிதம் அதிகரித்துவருகிறது என்று கவலைப்படதெரிவிக்கிறார் மனநல மருத்துவர் Dr. K. Lakshmi, District Psychiatrist, Govenment Hospital, Saidapet, Chennai பள்ளி மற்றும் கல்லூரி பிள்ளைகளுக்கு மன அழுத்தம் போக்கும் வகையில் பல ஆலோசனை நிகழ்ச்சிகளையும், மன அழுத்தம் குறைக்கும் விழிப்பு உணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறார். இன்றைய தலைமுறையினரில், குறிப்பாக தன்னிடம் வரும் பள்ளி, […]
இன்று உலக தற்கொலைத் தடுப்பு தினம். 2003 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு இந்த தற்கொலை தினத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10 ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
தற்கொலையால் உயிரிழந்தவர்களை நினைவுகூரவும், போராடுபவர்களுக்கு ஆதரவு அளிக்கவும், சமூக அளவிலான நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் தற்கொலை தடுப்பு நிகழ்வுகள், பிரச்சாரங்கள் மற்றும் கல்விச் செயல்பாடுகள் நடத்தப்படுகின்றன. உலகில் அதிக தற்கொலைகள் நடைபெறும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது. இந்நிலையில் இன்றைய தலைமுறையினரில் தற்கொலை செய்துகொள்வதன் விகிதம் அதிகரித்துவருகிறது என்று கவலைப்படதெரிவிக்கிறார் மனநல மருத்துவர் Dr. K. Lakshmi, District Psychiatrist, Govenment Hospital, Saidapet, Chennai
பள்ளி மற்றும் கல்லூரி பிள்ளைகளுக்கு மன அழுத்தம் போக்கும் வகையில் பல ஆலோசனை நிகழ்ச்சிகளையும், மன அழுத்தம் குறைக்கும் விழிப்பு உணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறார். இன்றைய தலைமுறையினரில், குறிப்பாக தன்னிடம் வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக அதிர்ச்சி செய்தியை அளிக்கிறார்.
பிள்ளைகள் பத்தாம், பன்னிரண்டாம் வகுப்புக்கு வந்துவிட்டாலே, படிப்பைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தக் கூடாது என்பது நமது பெற்றோர்களின் கண்டிப்பாக இருக்கிறது. அதிலும் இப்போது குழந்தை பிறக்கும்போதே அவர்கள் டாக்டராகவோ, வக்கீலாகவோ, இன்ஞினியராகவோ, ஆடிட்டராகவோ வரவேண்டும் என்பதை பெற்றோர்களைல் பலர் தீர்மானித்துவிடுகிறார்கள்.
பிறகு குழந்தை வளர வளர அவர்களுக்கு நேரமில்லாத அளவுக்கு பல கட்ட வகுப்புகளிலும் அடைத்துவிடுகிறார்கள். எப்போதும் படிப்பு இருந்தால் தான் உன்னால் முதலில் வர வேண்டும் என்ற டயலாக் பெரும்பாலானவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். எல்லோரும் முதல் என்றால் … எல்லோரும் டாக்டர் தான் என்றால்… இதை ஏன் பலரும் புரிந்துகொள்வதில்லை என்பதில் எனக்கு வருத்தம் தான். பெற்றோர்கள், சமூகம், கல்வி நிறுவனங்களின் அழுத்தத்தால் படிப்பு மட்டுமே வாழ்க்கையாகிபோகிறது பல பிள்ளைகளுக்கு. இதனால் கல்வி மீது வெறுப்பு கூட வருவதை பார்க்கமுடிகிறது.

இப்படிப் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவதால், வெளியில் விளையாடுவது, குடும்பத்துடன் நேரம் செலவிடுவது, உறவினர்கள் நண்பர்கள் வீட்டுக்குச் செல்வது என எல்லாமே நின்றுவிடுகின்றன. பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் கல்லூரிக்குச் செல்லும்போது அங்கும் பெரும்பாலும் முற்றிலும் மாறுபட்ட சூழலை எதிர்கொள்கின்றனர்.கல்லூரிக்குச் சென்ற பிறகு சுதந்திரம் என்றால் இனி தான் நல்ல வேலை கிடைக்க வேண்டும் அதனால் முன்பைப் போலவே படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என ஓடிக்கொண்டிருக்கின்றனர். தோல்வியை ஏற்க முடியாத மனநிலை, மனம் விட்டு பேசமுடியாத சூழல், நேரமின்மை, எதிர்கால அச்சம் இதனிடையே ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கண்டிப்பைத் தாங்கும் மனநிலை இல்லாமல் இருப்பது அவர்களைத் தவறான முடிவுகளை நோக்கிச் செல்ல வைக்கின்றன.
இன்றைய தலைமுறையினருக்கு முகம் பார்த்து நேரில் பேசுவதைவிட, மொபைல் மூலம் சாட்டிங் செய்வது வசதியாக இருக்கிறது. அவர்களது தனிப்பட்ட உறவுகளில் சிறிய பிரச்னை என்றாலும் அதைச் சமாளிக்கத் தெரியாமல், தோல்விகளைத் தாங்க முடியாமல் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். அந்த நேரத்தில், ஒரு வேகத்தில் தற்கொலை தான் தீர்வு என்று நினைத்து தவறான முடிவை எடுக்கிறார்கள். முந்தைய காலத்தில் பெற்றோர்கள் படிப்புடன் வாழ்க்கைப் பாடத்தையும் கற்றுக் கொடுத்தனர். எவ்வளவு பிரச்னைகள், கஷ்டங்கள் வந்தாலும் அவற்றை எப்படி எதிர்கொண்டு வாழ வேண்டும் என்பதை அவர்கள் வாழ்க்கை முறையிலேயே காண்பித்து அனுபவ ரீதியாக கற்றுக்கொடுத்தனர்.
பழையன புகுதல் என்பதற்கேற்ப இன்றைய தலைமுறையினருக்கு தோல்வி இல்லாத வெற்றி மட்டுமே வாழத்தகுந்தது என்று போதுக்காமல், அனுபவரீதியிலான வாழ்க்கை பாடங்களையும் கற்றுத்தர வேண்டும். பிள்ளைகளுடன் நேரம் செலவிட வேண்டும். தோல்வி வந்தாலும் அது தற்காலிகமானது என்பதை சொல்லிப்புரியவைக்க வேண்டும். தோல்வியும் வெற்றியும் வாழ்க்கையில் சுழலும் சக்கரங்கள் என்பதை புரிந்துகொண்டாலே பிள்ளைகள் வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்வார்கள்.
படிப்பைத் தாண்டி வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொடுப்பது அவர்களுக்கு வாழ்க்கையை எளிதாகக் கடக்கவும், தவறான முடிவுகளை எடுக்காமல் இருக்கவும் உதவும் என்கிறார் டாக்டர் கே. லட்சுமி.
இன்றைய சூழலில் மன அழுத்தம் இல்லாத சமூகத்தை உருவாக்க அனைவரும் உறுதி எடுப்போம்.
pengal
Hot Categories
Recent News
Daily Newsletter
Get all the top stories from Blogs to keep track.







