ஆரோக்கியம்
50 வயதில் எடை குறைக்க வேண்டுமா? இதை மட்டும் கவனமாகப் பின்பற்றுங்கள்!
- by geminimouli
- Oct 26, 2026
- 20 Mins
வயதாவது இயல்பானது. இதை தடுக்க முடியாது. இதனால் பொதுவாகவே உடல் நலத்திலும் மன நலத்திலும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தலாம். தோலில் சுருக்கங்கள் தோன்றுவது, எலும்புகள் மற்றும் தசைகள் பலவீனமடைவது போன்ற மாற்றங்களுடன், உடல் எடை அதிகரிப்பதும் இயல்பானது. எடை குறைக்க முயற்சிக்கும்போது குறிப்பாக, 50 வயதைக் கடந்தவர்கள் என்னலாம் கவனிக்கணும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை
உடல் எடையைக் குறைக்க ஆரோக்கியமான உணவுப் பழக்கமும் முறையான உடற்பயிற்சியும் அவசியம்.குறிப்பாக, 50 வயதைக் கடந்த பிறகு உணவுப் பழக்கத்திலோ உடல் செயல்பாடுகளில் திடீர் மாற்றங்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். 50 வயதைக் கடந்த பிறகு உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்பவர்கள் வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. மேலும் உணவுப் பழக்கத்தில் மாற்றங்கள் செய்வதாக இருந்தால் ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் உடற்பயிற்சி நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டும். இதன்மூலம் ஆரோக்கியமாக உடல் எடை குறைக்கலாம்.
தசை வலிமை பயிற்சி
மனித உடல் கொழுப்பு மற்றும் தசைகளால் ஆனது. உடல் எடையைக் குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபடும்போது, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைப்பதுடன் தசைகளின் வலிமையை அதிகரிப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தசை வலிமைக்கான பயிற்சிகளை நிபுணர்களின் அறிவுரையுடன் செய்வது எடை குறைப்பு இலக்கை அடைய உதவியாக இருக்கும்.
உடல் உழைப்பு
வயது அதிகரிக்கும்போது உடலின் ஆற்றல் குறைவதாக உணரலாம். சுறுசுறுப்பாகச் செயல்படுவது சிரமமாக இருக்கலாம். அதன் காரணமாகவே நடுத்தர வயதைக் கடந்த பிறகு உடல் எடையைக் குறைப்பது கடினமாக இருக்கலாம் . அதனால் உடல் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சுறுசுறுப்பாகச் செயல்படாமல் இருந்தால் எடை குறைக்கும் முயற்சியில் பலன்களைப் பெறுவது கடினமாகலாம். மேலும் உடல் உழைப்பின்மை எலும்புகள், மூட்டுகள், தசைகள் உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளைப் பாதிக்கக்கூடும். மேலும், இது ஒட்டுமொத்த உடல் நலத்திலும் நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
தூக்கம் அவசியம்
உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்க தூக்கமும் அவசியம். தேவையான அளவு தூக்கம் கிடைக்கவில்லை என்றால், அது உடல் எடையிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். உடல் மற்றும் மனம் சீராகச் செயல்படுவதற்கு நல்ல தூக்கப் பழக்கம் முக்கியமானது. குறிப்பாக, உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்பவர்கள் தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும். தூங்கும் அறையில் சத்தம், வெளிச்சம் போன்ற தடைகள் இல்லாமல் இருக்கும்படி பார்த்துகொள்ள வேண்டும்.
வளர்சிதை மாற்றம் அதாவது மெட்டபாலிசம் குறையலாம்
உடல் எடையைச் சீராகப் பராமரிப்பதில் மெட்டபாலிசம் எனப்படும் வளர்சிதை மாற்றச் செயல்முறை முக்கியப் பங்கு வகிக்கிறது. வயது அதிகரிக்கும்போது வளர்சிதை மாற்றத்தின் வேகத்திலும் மாற்றங்கள் ஏற்படலாம். இதனால் உடல் எடையைப் பராமரிப்பது சவாலாக இருக்கலாம்.
உடல் எடையைக் குறைப்பதற்கு உடல் செயல்பாடுகள், உடல்நலப் பராமரிப்பு மற்றும் அன்றாட நடவடிக்கைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது அவசியம். உடல் எடையில் ஏற்படும் மாற்றங்கள் எலும்புகள், இதயம் மற்றும் மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்துடனும் தொடர்புடையதாக இருக்கலாம்.
அதனால் 50 வயதைக் கடந்தவர்கள் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், தங்களது உடல்நிலைக்கு ஏற்ற ஆரோக்கியமான உணவுப் பழக்கம், முறையான உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
Author
pengal
Hot Categories
Recent News
Daily Newsletter
Get all the top stories from Blogs to keep track.





